ஏர் ஆசியா உள்நாட்டு விமானங்களுக்கு 20 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது

உள்நாட்டு விமான சேவைகளின் அதிகரிப்புக்கு ஏற்ப, ஏர் ஆசியா நாட்டிலுள்ள அனைத்து விமானங்களுக்கும் அனைத்து இருக்கைகளுக்கும் 20 சதவீத தள்ளுபடி வழங்கியுள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 முதல் டிசம்பர் 6, 2020 வரையிலான பயண காலத்திற்கு, இப்போது முதல் ஆகஸ்ட் 9, 2020 வரை, யசையளயை.உடிஅ மற்றும் ஹசைஹளயை மொபைல் பயன்பாட்டில் முன்பதிவுகள் கிடைக்கின்றன.
மேலும், ளுசூஹஞ மூலம் பயணிகள் அதிக சேமிப்புகளை அனுபவிக்க முடியும். ளுசூஹஞ மூலம் விமானக் கட்டணத்தோடு ஹோட்டல் சலுகைக்கான கூடுதல் 25 சதவீத தள்ளுபடியையும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம்.
ஏர் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மத் கூறுகையில், மலேசியாவில் உள்ள அனைத்து விமானங்களுக்கும் ஏர் ஆசியா அனைத்து இடங்களுக்கும் 20 சதவீத தள்ளுபடி வழங்குகின்றது. இதனால் அனைவரும் நியாயமான விலையில் பயணிக்க முடியும் என்றார். இந்த திட்டம் அடுத்த மாதம் பயணம் செய்யவிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
“அனைத்து விருந்தினர்களும் விழிப்புடன் இருக்கும்படி நாங்கள் ஊக்குவிக்கிறோம். எல்லா நேரங்களிலும் முகமூடி அணிவது, கைகளை தவறாமல் கழுவுதல் மற்றும் புறப்படும் நேரத்திற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருவது போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்“ என்று அவர் மேலும் கூறினார்.
அதுமட்டுமின்றி, விமான டிக்கெட்டை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் தங்கள் பயணத் திட்டங்களில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கும் ஏர் ஆசியா மேலும் தளர்வுகளை வழங்குகிறது. இந்த தளர்வை டிசம்பர் 31, 2020 வரை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம்.
இந்த பயணத் திட்ட மாற்றத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =