ஏர் ஆசியாவின் சுவையான உணவைத் தரையிலும் ருசிக்கலாம்

0

உணவுப் பிரியர்கள் ஏர் ஆசியா வின் பாக் நாசீர் நாசி லெமாக், அங்கிள் சின்‘ஸ் சிக்கன் ரைஸ் போன்ற பிரபல உணவு வகைகளை ருசிக்க அந்த விமானத்தில் ஏறி பயணிக்கும் வரை காத்திருக்கத் தேவையில்லை.
இது வரை விமானத்தில் வழங்கப்பட்ட அந்த உணவு வகைகள் இனி மிட் வெலி மெகாமோலில் உள்ள சந்தான் உணவகம், டி அன்ட் கோ காபே ஆகிய உணவு மையங்களிலும் கிடைக்கும். இன்று முதல் பொது மக்கள் பிரபலமான சோறு மற்றும் மீ வகை உணவு வகைகளை வெறும் 12 ரிங்கிட்டுக்கு வாங்கி ருசிக்கலாம். இவற்றைத் தவிர்த்து கம்போடியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் பிரபலமான உணவு வகைகளும் இங்கு விற்கப்படுகின்றன; சுவை மிகுந்த தேநீர் பானங்களும் உடன் விற்கப்படுகின்றன.
பொது மக்கள் இவற்றை சந்தான் இணைய தளத்திலும், டி அன்ட் கோ கையடக்கக் கருவி செயலியின் வழியாகவும் ஆர்டர் செய்யலாம்.
இந்த உணவு மையத்தைத் திறந்து வைத்த உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், ஏர் ஆசியாவின் இந்த முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இது போன்ற 5 உணவகங்களையும், 100 கூட்டு உணவு தயாரிப்பு நிறுவனங்களையும் (பிரன்சாய்ஸ்) உருவாக்க தாங்கள் இலக்கு கொண்டுள்ளதாக சந்தான் தலைமை நிர்வாகி கேத்தரின் கோ கூறினார்.
லண்டன், நியூயார்க், சீனா உட்பட ஏனைய ஆசியான் நாடுகளிலும் இது போன்ற உணவு மையங்களைத் திறக்க தாம் இலக்கு கொண்டுள்ளதாக ஏர் ஆசியா குழுமத் தலைமை நிர்வாகி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார். வெறும் பறக்கும் சேவையை மட்டுமல்லாமல் மக்களின் ஆகாரத் தேவைகளையும் ஏர் ஆசியா பூர்த்தி செய்யும். பயணச் சேவைகளை வெற்றிகரமான வழங்குவது போல், உணவுச் சேவை வழங்கலிலும் அது விரைவில் முத்திரை பதிக்கும். உணவு வழங்கல் சேவையை வழங்கும் கிராப் மற்றும் பூட் பாண்டா போன்ற
நிறுவனங்களோடு ஒத்துழைப்பதோடு, தனித்துவம் வாய்ந்த உணவு வழங்கல் செயலியையும் உருவாக்கும் நோக் கத்தை ஏர் ஆசியா கொண்டுள்ளது.
இந்த அறிமுகத்தைக் கொண் டாடும் வகையில் குறிப்பிட்ட காலம் வரையில் பாக் நாசீர் நாசி லெமாக் மற்றும் கோழி ரெண்டாங்கை அது 5 ரிங்கிட்டுக்கு விற்கிறது. பொது மக்கள் இந்தச் சலுகையை ‘ஆன்-லைன் ஆர்டர் மூலம் மட்டுமே பெற முடியும். ‘பிக் உறுப்பியத்தைக் கொண்டுள்ளவர்களும் இந்தச் சலுகையை அனுபவிக்கலாம்.
டி அன்ட் கோ செயலிகளை முதன் முறையாகப் பதிவிறக்கு கிறவர்களுக்கு இலவச காபியும் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 10 =