ஏபெக் உச்சநிலை மாநாட்டை அமெரிக்கா ஏற்று நடத்துவதை புத்ராஜெயா விரும்பவில்லை

0

இம்மாதம் சிலியில் நடைபெற விருந்த ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சநிலை மாநாடு (ஏபெக்) ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு அமெரிக்காவில் இந்த உச்சநிலை மாநாடு நடைபெற வாஷிங்டனின் பரிந்துரைக்கு புத்ராஜெயா ஒப்புதல் தெரிவிக்கவில்லை என வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா கூறியிருந்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் இந்த ஏபெக் மாநாட்டை நடத்த அண்மையில் அமெரிக்க வெளியு றவு அமைச்சர் மைக் போம்பியோ தொலைபேசி மூலம் தம்மிடம் தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்தார்.


அண்மையில் பேங்காக்கில் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள தாம் சென்றபோது போம்பியோ தொலைபேசி மூலம் தம்மை அழைத்து ஏபெக் உச்சநிலை மாநாடு குறித்து மலேசியாவின் நிலைபாட்டை தெரிந்து கொள்ள விரும்பியதாக அவர் சொன்னார்.
ஏபெக் மாநாட்டை சிலி ஏற்று நடத்தாததால் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் இந்த மாநாட்டை நடத்த வாஷிங்டன் விருப்பம் தெரிவித்ததாக நேற்று மக்களவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


இது ஒரு நல்ல உத்தேசமல்ல என்று மைக் போம்பியோவிடம் தாம் தெரிவித்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, ஒரு சிறப்பு உச்சநிலை மாநாட்டை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நடத்துவ தற்கான காரணம் என்ன என்று புத்ராஜெயா தெரிந்துகொள்ள வேண்டும் என பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து, சைபுடின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இருப்பினும் அமெரிக்க அதிபர் தலைமையேற்கும் அந்த சிறப்பு உச்சநிலை மாநாடு என்ன என்பது குறித்து தமக்குத் தெரியாது என்றார் அவர்.


பிரதமர் துன் மகாதீருக்கு ஆசியான் உச்சநிலை மாநாட்டிற் கான சிறப்புத் தூதர் அனுப்பிய கடிதத்தின் மூலம் தாம் இதனைத் தெரிந்து கொண்டதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here