ஏபெக் உச்சநிலை மாநாட்டிற்கு அன்வார் தலைமையேற்க வேண்டும்

0

வரும் நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஏபெக்) மாநாட்டிற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்க வேண்டும் என பகாங் பிகேஆர் வலியுறுத்தியது.இந்த மாநாட்டை மலேசியா எடுத்து நடத்துவதால் ஒரு செல்வாக்கு மிக்க தலைவர் பிரதிபலிக்க வேண்டும் என பகாங் பிகேஆர் தொடர்புக் குழு தலைவர் வான் பௌஸுல்டின் வான் அமாட் கூறினார்.
ஆகையால் இவ்வாண்டு மே மாதம் துன் மகாதீர் மற்றும் அன்வாருக்கிடையிலான அதிகாரமாற்றம் நடக்க வேண்டும் என அவர் சொன்னார்.
இதன் வழிதான் ஏபெக் மாநாட்டை அன்வார் வழிநடத்த நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை இந்த மாநாடு நிச்சயம் உலக கவனத்தை ஈர்க்கும். காரணம் மலேசியாவை பிரபலமடையச் செய்ய அன்வாரின் தலைமைத்துவமே போதுமானது என அவர் தெரிவித்தார்.
நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஏபெக் உச்சநிலை மாநாட்டிற்கு முன்பாக மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இருப்பதே சிறந்த ஒன்று என்றார் அவர்.
நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஏபெக் உச்சநிலை மாநாட்டிற்குப் பிறகு தாம் விலகிக் கொள்ளப்போவதாக பிரதமர் மகாதீர் தொடர்ந்து கூறி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − five =