எஸ்.பி.எம் தேர்வில் இந்திய மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி


இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் நேற்று தொடங்கி மாணவர்கள் இணையதளம் வழி தங்களது முடிவுகளை பெற்றுக் கொண்டார்கள்.
அந்த வகையில் கடந்தாண்டு நாட்டையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கோவிட்-19 நோய் தொற்று காரணமாக மாணவர்கள் வீட்டில் இருந்தபடி தங்களது கல்வியை கற்று பல சவால்கiளை கடந்து வந்தனர், இச்சவால்களையும் தாண்டி மாணவர்கள் குறிப்பாக இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்று நமது இந்திய சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். மிக சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கம் கல்வி உபகார நிதி மற்றும் மேல் படிப்பிற்கான பல்வேறு உபகார நிதிகளை வழங்கி வருகிறது.ஆகவே சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அவற்றை காலம் கடத்தாமல் விரைந்து மனு செய்து தங்களுக்கான மேல் கல்வி வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும்படி கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சந்தாரா தெரிவித்தார்.
அதேசமயத்தில் சுமாரான தேர்ச்சி பெற்ற மாணவர்களும் தங்களது முயற்சிகளை கைவிடாமல் மேலும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு அரசாங்கத்தின் பல்வேறு டிப்ளோமா மற்றும் சான்றிதழ் மேல் படிப்பிற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது . ஆண்டுதோறும் இதுபோன்ற அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும் இந்திய மாணவர்கள் மிக குறைந்த அளவில் விண்ணப்பம் செய்வதால் கிடைக்கப்பெறும் வாய்ப்புகளை இழந்து வருகின்றோம். அந்த வகையில் சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்கள் அந்த விளக்கங்களை நன்கு கண்டறிந்து விண்ணப்பம் செய்யலாம். இதுபோன்று டிப்ளோமா மற்றும் சான்றிதழ் பயிலும் மாணவர்கள் தொடர்ந்து பல்கலைக்கழக படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு மிக அதிகம். ஆகவே மாணவர்கள் இதுபோன்ற வாய்ப்புகளை நழுவ விடாதீர்கள். மாணவர்கள் தங்களது தேர்ச்சி முடிவுகளுக்கு ஏற்ப முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். முழுமையாக அரசாங்கம் வழங்கும் எல்லா வாய்ய்புகளையும் பயன்படுத்தி மாணவர்கள் முடிவு எடுக்க வேண்டுமென சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சந்தாரா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + one =