எஸ்.ஓ.பி யை மீறிய அமைச்சர் கைருடின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்!

நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறையை (எஸ்.ஓ.பி) மீறும் அமைச்சர்கள் பதவி விலகுவதே சரியான தீர்வு என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஸுல்கிப்லி மாட் கூறினார். வெளிநாடுகளில் இந்த நடைமுறை இருந்து வருகிறது. ஆனால், இந்நாட்டில் எஸ்.ஓ.பியை மீறிய அமைச்சர் கைருடின் மாட் ரசாலி 1000 வெள்ளி அபராதத்தை செலுத்தி விட்டு சுதந்திரமாக நடமாடுவதாக அவர் சாடினார். கோவிட்-19 வைரஸ் தாக்கத்தின் போது எஸ்.ஓ.பியை மீறிய நியூஸிலாந்து, ஐரீஸ், இங்கிலாந்து, கானா மற்றும் பெர்மூடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
ஆனால், துருக்கி பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய தோட்டம், தொழில்துறை மற்றும் மூலப்பொருள் அமைச்சர் கைருடின் மாட் ரசாலி தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் சுதந்திரமாக நடமாடி வருகிறார் என அவர் சாடினார்.
அதே வேளையில், இவர் தமது நான்கு மாத சம்பளத்தை கோவிட்-19 நிதிக்கு தந்துவிட்டால் இப்பிரச்சினைக்கு தீர்வு பிறந்துவிடுமா என அவர் வினவினார்.
அமைச்சர்கள் எஸ்.ஓ.பியை பின்பற்றாவிட்டாலும் மக்கள் பின்பற்றுவார்கள் என அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கக் கூடாது என ஸுல்கிப்லி நினைவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − eight =