எஸ்பிஎம் தேர்வு 2021 ஜனவரி 6 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும்

0

ஐந்தாம் படிவ மாணவர் களுக்கான எஸ்பிஎம் தேர்வு 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நேற்று கல்வியமைச்சு எஸ்பிஎம் தேர்வுக்கான இந்த புதிய தேதியை அறிவித்தது.
எஸ்பிஎம் தேர்வு இவ்வாண்டு நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 தாக்கத்தால் பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து எஸ்பிஎம் தேர்வு உட்பட அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இடைநிலைப்பள்ளிகள் கடந்த ஜூன் 24ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 7 =