எஸ்ஓபியை மீறிய திரெங்கானு ஆட்சிக்குழு உறுப்பினருக்கு ரிம.2,000 அபராதம்


திரெங்கானு, சுக்காய் சட்டமன்ற உறுப்பினரும், ஆட்சிக்குழு உறுப்பினருமான ஹனாஃபியா மாட் எஸ்ஓபியை மீறிய குற்றத்திற்காக 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.
மாநில சமூக நலன், மகளிர் மேம்பாடு, குடும்ப மற்றும் தேசிய ஒற்றுமை செயற்குழுத் தலைவரான ஹனாஃபியா மாட் நோன்புப் பெருநாளின் போது நோன்புப் பெருநாளின்போது அவர் சில வீடுகளுக்கு வருகையளித்து பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டபோது வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஹன்யான் மேலும் கூறும்போது, எஸ்ஓபியை அனுசரிக்காத எவர் மீதும் பாரபட்சம் காட்டப்படது என்று எச்சரித்தார்.
தமக்கு அளிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்துவதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனாஃபியா தமது முகநூலில் தெரிவித்திருந்தார்.
அபராதம் விதிக்கப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினரிடையே ஹனாஃபியா இரண்டாவது நபராவார். இதற்கு முன்னர், ஜாபி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அஸ்மான் இப்ராஹிமிற்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − seven =