எஸ்ஓபியை மீறியதற்காக 4 பேர் கைது

மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறைகளை (எஸ்ஓபி) மீறியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
இவர்களில் ஒருவர் கராவோக்கே கேளிக்கை மையத்தில் சமூக இடைவெளிக்கு இடைஞ்சலாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார். மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் போது எஸ்ஓபியை கண்காணிக்க 3,466 பணிப்படைக் குழுக்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
15,210 பேர் கொண்ட இந்த குழுவினர் 4,158 பேரங்காடிகள், 5,790 உணவகங்கள், 1,170 அங்காடிக் கடைகள், 1,129 தொழிற்சாலைகள், 3,745 வங்கிகள் மற்றும் 720 அரசாங்க அலுவலகங்களைச் சோதனையிட்டதாக அவர் சொன்னார்.
அதே வேளையில், கள்ளக் குடியேறிகளுக்கு எதிரான சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =