எஸ்ஓபிஐ கண்காணிப்பது மிகவும் சிரமம்

சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரையறுக்கப்பட்ட நெறி முறை களைப் பின்பற்றத் தவறியுள்ள தால் மக்கள் நடமாட கட்டுப்பாடு உத்தரவை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பம் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் அதனை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அமைச்சர்களே பின்பற்றத் தவறியது ஊடகங்களில் வெளியிடப்பட்டதை அடுத்து இந்த நிலை உருவாகி இருப்பதாக அவர் தெரிவித்தார். நடவடிக்கையின் மூலம் தலைமைத்துவம் என்ற கோட்பாடு மீறப்பட்டு உள்ளதாகவும் அவர் வருத்தத்தோடு தெரிவித் துள்ளார். இந்த விவகாரத்தில் நாம் சில தவறுகளைச் செய்து இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டார். எஸ்ஓபியை அமைச்சர்களே கடைப்பிடிக்காதபோது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா, பிரதமர் துறை சமய விவகாரங்களுக்கான அமைச்சர் துல்கி முகவரி, தோட்டத்துறை மூலப்பொருள் அமைச்சர் ஆகியோர் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது இங்கு குறிப் பிடத்தக்கது. தேசிய தடுப்பூசித் திட்டத்தில் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வரும் பொதுமக்கள் எஸ்ஓபிஐ அனுசரிக்க வேண்டியது கட்டாயமாக இருந் தாலும், அங்கு அது கடைப்பிடிக்கக் கண்காணிப்பதில் சிரமம் இருப்பதாக அவர் தெரிவித்தார். பல நாடுகளில் கோவிட் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இருந்தாலும், அங்கும் இதே மாதிரியான பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இப்போது தொற்றில் இருந்து சிறிது மீண்டுள்ள நாடுகளில் இதற்கு முன்னர் நம் நாட்டைப் போலவே எஸ்ஓபியைக் கடைப்பிடிக்காமல் இருந்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். எனினும் நாம் பல விவகாரங்களில் முன்னேறி இருக்கிறோம் என்பதை கூறுவதில் தவறில்லை. இந்நிலையில் சிறிது காலத்திற்குப் பின்னர் எல்லா விஷயங்களிலும் மக்கள் போராடி களைத்து விட்டதால், எஸ்ஓபியை கடைப்பிடிப்பதில் சிறிது சுணக்கம் காட்டுவதாக அவர் தெரிவித்தார். நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பைஸர் நிறுவனத் திடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அங்கிருந்து கணிசமான தடுப்பூசிகளைச் பெற நாம் வெற்றி பெற்றுள்ளோம். இனி நாட்டில் இந்த பைஸர் தடுப்பூசிகளே அதிகமாகச் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =