எஸ்ஆர்சி வழக்கு சவூதி மன்னருக்கும் நஜிப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது

0

சவூதி அரேபியாவின் மன்னருக்கும் நஜிப் ரசாக்கிற்கும் நெருங்கிய நட்புறவு இருந்ததாக அனிஃபா அமான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2010 ஜனவரி 16இல் நஜிப் ரசாக் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு ரியாத் சென்றபோது, சவூதி மன்னர் அப்துல்லா அப்துல்லாஸிஸ் அல்-சவுட் விலையுயர்ந்த குதிரை ஒன்றை நஜிப்பிற்கு பரிசாகக் கொடுக்க முன் வந்தபோது, அதனை நஜிப் மரியாதையாக மறுத்து விட்டதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான், எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட்டை நஜிப் கையாடல் செய்த வழக்கின் விசாரணையில் சாட்சி யமளித்தபோது தெரிவித்தார்.
மேலும், ஜனவரி 16ஆம் தேதி சவூதி அரசின் மிக உயரிய விருதான மன்னர் அப்துல்லாஸிஸ் ஆர்டர் ஆஃப் மெரிட் (முதல் தரம்) விருதினை நஜிப் ரசாக்கிற்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். அந்த விருதானது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
மன்னர் அப்துல்லாஸிஸ், நஜிப்புடன் கைகுலுக்கியது, அவரோடு அளவளாவிய விதத்தை யும் கவனித்தால், அவர் நஜிப்பின் மீது மிகுந்த மரியாதையை வைத்திருந்ததோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தது தெரிய வந்ததாக அனிஃபா அமான் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − one =