எவர்செண்டாய்க்கு 32.3 கோடி ரிங்கிட் மதிப்பிலான குத்தகைகள்

0

நாட்டின் பிரபல கட்டுமான நிறுவனமான எவர்செண்டாய் கார்ப்பரேஷன் நிறுவனம் 32.3 கோடி மதிப்பிலான 6 குத்தகைகளை மலேசியா, இந்தியா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து பெற்றிருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த குத்தகைகளின் மூலம் அது 187 கோடி ரிங்கிட்டுக்கான சொத்து மதிப்பை அடைந்துள்ளது.கோலாலம்பூரில் இரண்டு வர்த்தகக் கட்டடங்களுக்கு இடையே எஃகுப் பால குத்தகையையும் இந்தியா, ஹைதராபாத்தில் வர்த்தகக் கட்டடத்தில் எஃகிலான கட்டுமான குத்தகையையும் கத்தாரில் வர்த்தகக் கட்டடத்திற்கான எஃகு கட்டுமானம், ஹோட்டல் மற்றும் அதன் பல்வேறு கட்டுமானத்திற்கான குத்தகையையும் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் குத்தகைகளின் மூலம் நிறுவனத்தின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும் என எவர்செண்டாய் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல்முறைத் தலைவர் டான்ஸ்ரீ ஏ.கே. நாதன் தெரிவித்தார்.
இந்த குத்தகைகளின் மூலம் தமது நிறுவனம் நேர்மை, கட்டொழுங்கு, அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டோடு செயல்பட்டு கட்டுமானத் துறையில் சிறப்பாகச் செயல்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 15 =