எல்லா கோயில்களுக்கும் தடை: 3 கோயில்களுக்கு மட்டும் அனுமதியா?

  நாட்டில் கோவிட்-19 தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து சிலாங்கூர், புத்ராஜெயா, கோலாலம்பூர் ஆகிய மாநிலங்களில் அக்டோபர் 27ஆம் தேதி வரை சிஎம்சிஓ விதிக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் நவராத்திரி விழா கெண்டாடப்படும் வேளையில், சிஎம்சிஓ-வின் கீழ் இந்த 3 இடங்களில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் வழிபாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது வேதனைக்குரியது. ஆனால் அதே வேளையில், ஒரே நிர்வாகத்தின்கீழ் செயல்படும் கோலாலம்பூரில் உள்ள 2 கோயில்களுக்கும் சிலாங்கூரில் உள்ள 1 கோயிலுக்கும் நவராத்திரி விழா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயம் என செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் கேள்வி எழுப்பினார்.
  இந்த 3 மாநிலங்களிலும் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இது மத்திய அரசாங்கத்தின் உத்தரவாகும். மலேசிய இந்துப் பெருமக்கள் 9 நாட்களுக்கு நவராத்திரியை கோயில்களில் கொண்டாட முடியாமல் உள்ளனர்.
  அரசாங்கத்தின் உத்தரவுக்குட்பட்டு இந்த 3 மாநிலங்களிலும் அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டுள்ளன.
  ஆனால் கோலாலம்பூரில் உள்ள 2 முக்கிய கோயில்களுக்கும் சிலாங்கூரில் உள்ள 1 கோயிலுக்கும் நவராத்திரி விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  ஒற்றுமைத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் இதற்கு அனுமதிக் கடிதத்தை வழங்கியிருக்கிறார்.
  இந்த 3 கோயில்களும் ஒரே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நவராத்திரிக்காக இந்த 3 கோயில்களுக்கு அனுமதி வழங்கியதை நான் குறைகூறவில்லை.
  மற்றக் கோயில்களும் நவராத்திரியைச் சிறப்பாகக் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அனைவருக்கும் நீதி பொதுவானது.
  வேண்டியவர்களின் கோயில்களுக்கு மட்டும் அனுமதி வழங்கிவிட்டு மற்ற கோயில்களை இழுத்து மூடுவது என்ன நியாயம் என குணராஜ் கேள்வி எழுப்பினார்.
  இந்த விவகாரத்தை அரசாங்கம் மிகக் கடுமையாகக் கருத வேண்டும். அனுமதி வழங்குவதாக இருந்தால், அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் வழங்க வேண்டும்.
  3 கோயில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பது மலேசிய இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
  ஆகவே அரசாங்கம் இதற்கு ஒரு சரியான முடிவெடுக்க வேண்டும் என குணராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  one × 5 =