கோவிட்-19ஆல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தால், அமலில் இருக்கும் நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு ஆண்டு இறுதி வரை தொடரும் என்றும் பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரெட்ஸுவான் மாட் யூசோப் தெரிவித்தார்.
ஒரு பகுதியில் காணப்படும் நோய்த் தொற்றினை ஆராய்ந்து சுகாதார அமைச்சு பரிந்துரைக்கும் வட்டாரங்களில் சிஎம்சிஓவுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நோய்த் தொற்றின் அதிகரிப்பு தொடருமானால், சிஎம்சிஓவைத் தொடர்ந்து அமல்படுத்த அரசு முடிவெடுக்கும் என்று பட்ஜெட் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
பெர்லிஸ், பகாங், கிளந்தான் ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து ஏனைய மாநிலங்களில் சிஎம்சிஓ அமலில் உள்ளது. ஜொகூர், கெடா, திரெங்கானுவில் சிஎம்சிஓ நீக்கப்பட்டுள்ளது. கிளந்தானில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அது அறிவிக்கப்பட்டுள்ளது.