எம்எச்370 விமானத்தின் துயரச் சம்பவத்தை மீண்டும் கிளற வேண்டாம்

0

ஆறு ஆண்டுக்கு முன்னர் நடந்த எம்எச்370 விமானம் காணாமல் போன துயரச் சம்பவத்தைக் கிளறி அதில் மரணமடைந்த பயணிகளின் குடும்பத்தாரின் துயரத்தை மேலும் கிளற வேண்டாமென முன்னாள் பொது வான்போக்குவரத்து தலைமை இயக்குநர் அஸாருதின் அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டார். அந்த விமானம் காணாமல் போனது ஒரு மர்மமான சோகத் கதை என்றும் அதனை ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் மீண்டும் கிளறி வேதனையை அதிகப்படுத்தக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.

விமானம் சம்பந்தமான விசாரணையின்போது தாம் டோனி அப்போட்டை சந்தித்திருப்பதாகவும் ஆனால், அது பற்றி அவரிடம் பேசியது கிடையாது எனவும் அஸாருதின் தெரிவித்தார். அது தற்கொலை உள்ளடக்கிய கொலை என்ற கருத்து அப்போது நிலவினாலும், அதனை நிரூபிக்கத் தக்கச் சான்றுகள் இல்லை.

என்ன காரணத்திற்காக அதனை டோனி அப்போட் மீண்டும் குறிப்பிட்டிருப்பது புரியாத புதிராக இருப்பதாக, அப்போது எம்எச் 370 மேல் மட்ட தொழில்நுட்ப பணிக்குழுவின் தலைவராகப் பணியாற்றிய அஸாருதின் தெரிவித்தார். அண்மையில் டோனி அப்போட் எம்எச்370 விமானத்தைப் பற்றிப் பேசும்போது, அது கொலை கலந்த தற்கொலை என மலேசியாவின் மேல் மட்டத் தலைவர்கள் முடிவுக்கு வந்ததாகக் குறிப்பிட்டதை ஸ்கை நியூஸ் ஒளிபரப்பியிருந்தது. சம்பவம் நடந்தபோது, ஆஸ்திரேலியாவின் பிரதமராக டோனி அப்போட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 7 =