எப்ஏ கிண்ண கால்பந்து; ஸ்ரீ பகாங் எப்சி, பெர்லிஸ் யுனைடெட் எப்சி அணிகள் வெற்றி

2022 எப்ஏ கிண்ண முதல் சுற்று ஆட்டமொன்றில் ஸ்ரீ பகாங் எப்சி 5 – 4 எனும் பெனால்டி கோலின் மூலம் மஞ்சோங் சிட்டி எப்சியை தோற்கடித்தது.இந்த ஆட்டம் நேற்று முன்தினம் டாருள் மாக்மூர் அரங்கில் நடைபெற்றது.முழு நேர ஆட்டம் 0 -0 என முடிவுற்றது.
முதல் பாதி ஆட்டத்தின் 19 -வது நிமிடத்தில் ஸ்ரீ பகாங் எப்சியின் இறக்குமதி ஆட்டக்காரர் மாமுட் சதாரா மற்றும் 38 -வது நிமிடத்தில் சியான் கான் கியானேலி இருவரும் கோலடிக்கும் முயற்சியை மஞ்சோங் சிட்டி எப்சியின் கோல் காவலர் வெற்றிகரமாக முறியடித்தார்.
90 நிமிட முழு நேர ஆட்டம் முடிவுற்று,30 நிமிட கூடுதல் நேரம் வழங்கப்பட்டும்,இரு அணிகளும் மேற்கொண்ட தாக்குதல்கள் எந்தவொரு பலனையும் தராத நிலையில் ஆட்டம் 0 -0 என முடிவுற்றதால் பெனால்டி மூலம் வெற்றியை நிர்ணயிக்க வேண்டியதாயிற்று.
செராஸ் கோலாலம்பூர் கால்பந்து அரங்கில் நடைபெற்ற நடைபெற்ற மற்றொரு எப்ஏ கிண்ண கால்பந்து ஆட்டத்தில் பெர்லிஸ் யுனைடெட் எப்சி 2 -0 எனும் கோலில் அரச மலேசிய போலீஸ் படை எப்சியை தோற்கடித்தது.ஆட்டத்தின் 26 -வது நிமிடத்தில் அஸ்ரிஸான் அகமட் தமது அணிக்கான முதல் கோலை அடித்தார்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில்,தொடந்து பல்வேறு அதிரடி தாக்குதல்களை நடத்திய பெர்லிஸ் யுனைடெட் எப்சி,96 -வது நிமிடத்தில் முகமட் பைசால் கடிர் மூலம் மேலுமொரு கோலை பெற்று,தமது வெற்றியை உறுதி செய்துக் கொண்டது.இந்த வெற்றியின் மூலம் பெர்லிஸ் யுனைடெட் எப்சி,இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 13 =