எப்எம்டியுடன் பேச பிகேஆர் உயர்மட்டத் தலைவர்களுக்குத் தடை!

0

இணையதள ஏடான எப்எம்டியுடன் பேசுவதிலிருந்து தனது உயர்மட்டத் தலைவர் களுக்கு பிகேஆர் தடை விதித் துள்ளது. எப்எம்டி இணைய தள ஏடு வெளியிட்டுள்ள செய்திகளில் அதிருப்தி அடைந்ததை தொடர்ந்து இந்த தடை விதிக்கப் பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இதே போல் பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த மற்றொரு கட்சியும் இதேபோன்று தடைவிதித்துள்ளதாகக் கூறப்படு கிறது. நட்புமுறையிலான ஊடகங் களுடன் மட்டுமே பேசும்படி பிகேஆர் உயர்மட்டத் தலைவர் களுக்கு உத்தரவு விடுக்கப்பட் டுள்ளதாக நம்பப்படுகிறது.
‘இருப்பினும் இது முற்றான புறக்கணிப்பு அல்ல. எங்களின் செய்தியாளர்கள் கூட்டங்களில் கலந்துகொள்ள இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என பெயர் குறிப்பிட
விரும்பாத பிகேஆர் தலைவர் ஒருவர் கூறினார்.
எப்எம்டிக்கு எதிரான இந்த உத்தரவு குறித்து மேலும் மூன்று மூத்த பிகேஆர் தலைவர்கள் உறுதிப்படுத்தினர்.
கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் ஊடகங்களுக்கு எதிராக இது போன்ற தடைகளை விதித்து வந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 6 =