என் பிணத்தின் மீது நடந்து சென்றுதான் இந்து சமயத்தை அழிக்க முடியும்!

நாத்திகனையும் அன்போடு அரவணைத்துக் கொள்ளும் இந்து சமயத்தை அழிப்பதற்கு தோன்றிய இந்த சிறு கூட்டத்தினரால் ஒன்றும் செய்யமுடியாது. அப்படி செய்ய நினைத்தால் என் பிணத்தின் மீது தான் நடந்து செல்ல வேண்டும் என சுங்காய் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன் அச்சலிங்கம் கடுமையாக சாடியுள்ளார். இந்து சமயத்தை இழிவுபடுத்து கின்றவர்கள் இந்து மதத்தை சதா நினைத்துக் கொண்டுதான் இருக்கின் றனர். அந்த வகையில், நாட்டில் திடீரென்று ஒரு கூட்டம் இந்து மதத்தையும், இந்து சங்கத் தலைவரைப் பற்றியும், மலேசிய தமிழ் இந்துக்களை பற்றியும் தூற்றிப் பேசிவருவது விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றும் சிவநேசன் குறிப்பிட்டார். பினாங்கில் ஒத்திகைப் பார்க்கும் இந்த நாடகத்தின் பின்னணியில் மறைந்துகொண்டு வேடிக்கைப் பார்க் கும் அந்த பெரிய மனிதர் யார் என்று மலேசிய இந்துக்களும், தமிழர்களும் நன்கு புரிந்துகொண்டனர் என சிவநேசன் சுட்டிக்காட்டினார். அந்த கோழைக்கு துணிவு இருந்தால், உள்ளே இருந்து கொண்டு அறியா பிள்ளைகளை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டவேண்டாம். சுயமரியாதை இருந்தால் வெளியே வந்து உங்கள் கொள்கைக்காகப் போராடவேண்டும்.

இந்நிலையில், கீழறுப்பு வேலையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண் டும். அதுதான் அவர் கற்ற கல்விக்கும் பதவிக்கும் மாண்பாகும் என்று சிவநேசன் கண்டனம் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். என்பது இந்து மத தீவிரவாதக் கொள்கையைக் கொண்டவர் கள். அவர்கள் மூலம் நாட்டுக்குள் ஊடுருவி இங்குள்ள மலேசிய இந்து சமூகத்தினர் மற்றும் தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கப் பார்க்கின்றனர். மேலும், அந்த அமைப்பின் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் அந்த சிறிய கூட்டம் போலீஸில் புகார் கொடுத் துள்ளது என்றும் சிவநேசன் எடுத் துரைத்தார். போலீஸில் யாரும் புகார் செய்ய முடியும். அந்த புகாரில் உண்மை இருக்க வேண்டும். பொய்யான தகவலாக இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், குற்றவியல் 182 பிரிவின் கீழ் புகார் வழங்கிய நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்த பட்சம் ஆறு மாதத் சிறைதண்டனை அல்லது 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும். எடுத்துக்கட்டாக அண்மையில், தெலுக் இந்தானில் இதே குற்றவியல் 182 பிரிவில் ஒரு பெண் தண்டனை அடைந்துள்ளார் என்றும் ஒரு வழக்கறிஞருமான அவர் எடுத்துக் காட்டினார். இங்குள்ள கும்பல் ஒன்று, வலதுசாரி ஆர்.எஸ்.எஸ். கும்பலோடு இணைந்து மலேசியத் தமிழர்களை ஒழித்துக்கட்ட தொடங்கிவிட்டனர் என்றும் அந்த பினாங்கில் உள்ள சிறு கூட்டத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்று சிவநேசன் குறிப்பிட்டார். நம் நாட்டில் இந்துக்களும், தமிழர் களும் ஒற்றுமையுடன் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். நமக்கு வரும் பிரச்சினையே நம்மிடையே உள்ளவர் களின் மூலமாகவே சந்திக்க வேண்டி யுள்ளது. இப்படி பேசுகின்றவர்கள் மதமாற்றப் பிரச்சினையிலும், கோயில் உடைப்பு சம்பவங்களின்போது எங்கே போனார்கள்? என்றும் சிவநேசன் வினா எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 14 =