எனது வங்கிக் கணக்கில் வெ.33 லட்சம் சேர்க்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை!

தமது வங்கிக் கணக்கில் 33 லட்சம் வெள்ளி பெற்றதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டு அடிப்படையற்ற, அரசியல் நோக்கிலான குற்றச்சாட்டு என அவர் குறிப்பிட்டார்.
கடலடி சுரங்கப் பாதைத் திட்டத்தில் 33 லட்சம் வெள்ளி கையூட்டு வாங்கியதாக நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டு குறித்து தமது பாகான் நாடாளுமன்ற சேவை மையத்தில் அவர் பேசினார்.
அந்த 33 லட்சம் வெள்ளி எங்கே இருக்கிறது என்பதை எம்ஏசிசி நிரூபிக்கவில்லை. தமது கைவசமோ, வங்கிக் கணக்கிலோ அந்தத் தொகை இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் தாம் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் போராடி நிரூபிக்கப் போவதாக பினாங்கு முன்னாள் முதலமைச்சருமான அவர் சொன்னார்.
எனது வங்கிக் கணக்கில் இந்தத் தொகை இருப்பது குறித்து எம்ஏசிசி என்னிடம் கேள்வி எழுப்பவில்லை என ஜசெக பொதுச் செயலாளருமான அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =