எனது ஆதரவாளர்களை தெரிந்துகொள்ளவே இந்த விசாரணை!

  புதிய ஆட்சியை அமைப்பதற்கு தம்மை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை பற்றி புக்கிட் அமான் போலீசார் விசாரணை நடத்தியதாக கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மேலும், என்னை ஆதரரிக்கும் எம்பிகள் யார்? என்பது குறித்தும் போலீசார் என்னிடம் கேள்வி கேட்டனர்.

  என்னை ஆதரிக்கும் எம்.பி.க்கள் யார். அவர்களின் பெயர்கள் என்ன என்று போலீசார் கேட்டனர். இது எனக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னருக்கும் இடையிலான விவகாரம் என்று பதிலளித்ததாக அவர் சொன்னார்.

  மேலும், என்னை ஆதரிக்கும் கட்சித் தலைவர்களின் உறுதிக் கடிதங் களையும் மாமன்னரிடம் ஒப்படைத்து விட்டேன்.
  ஆகவே, இது எனக்கும் மாமன்னருக்கும் இடையிலான விவகாரம். இதை போலீசாரும் உள்துறை அமைச்சும் விசாரிக்கத் தேவையில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.
  தம்மை ஆதரிக்கும் 121 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர் பட்டியல் தொடர்பில் கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று புக்கிட் அமானில் வாக்குமூலம் கொடுத்தார்.
  நேற்று மாலை 3.00 மணிக்கு மேல் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புக்கிட் அமான் வந்தார். முன்னதாக அவரின் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் வந்தடைந்தார்.
  புக்கிட் அமான் நுழைவாசல் 2 இன் வழியாக டத்தோஸ்ரீ அன்வார் வந்தடைந்த வேளையில் அவரின் வருகைக்காக பிரதான நுழை வாயிலில் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்.
  பின்னர், புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையிடம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாக்குமூலத்தை வழங்கி முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.
  புதிய ஆட்சியை அமைப்பதற்கு தமக்கு போதுமான எம்.பி.க்கள் இருப்பதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூன்று வாரங்களுக்கு முன்னர் அறிவித்தார். இது தொடர்பில், அவருக்கு எதிராக 113 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.
  குற்றவியல் நடைமுறைச் சட்டம், செக்‌ஷன் 505 மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம், செக்‌ஷன் 233இன் கீழ் புக்கிட் அமான் போலீசார் நேற்று டத்தோஸ்ரீ அன்வாரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  5 × five =