
சீன நாட்டிலிருந்து கொரோனோ வைரஸ் கிருமி பரவிக் கொண்டி ருந்தாலும் மலேசிய அரசாங் கம் எந்தக் கூட்டத்திற்கும் அல்லது திருவிழாவிற்கும் தடை விதிக்காது.
எதிர்வரும் பிப்ரவரி 8இல் கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவும் இதில் அடங்கும் என்று துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார்.
அதிகமான நபர்கள் பங்கேற்கும் கூட்டங்களைத் தடை செய்வதற்கு உலக சுகாதார நிறுவனம் (டபுள்யூ. எச். ஓ) இதுவரை எந்த அறிவிப்பும் செய்யவில்லை.
முதலில் நிகழும் சம்பவங் களை நாங்கள் கண்காணிப் போம். பெரிய அளவிலான கூட்டங்களை நிறுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு செய்தால் நாங்கள் நோட்டீஸ் அனுப்புவோம் என்று துணைப்பிரதமர் நேற்று நிருபர் களிடம் கூறினார். அதற்கு முன்பு புத்ரா ஜெயாவிலுள்ள சுகாதார அமைச்சின் அவசர கால நெருக்கடி மையத்திற்கு வருகை புரிந்தார். பரவி வரும் கொரோனோ வைரஸ் வியாதி தொடர்பாக அம்மையம் துவங்கப்பட்டது.
இந்து மதத்தைச் சார்ந்தவர்களால் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கூடுவார்கள். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஊர்வலத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். அது பற்றி வினவப்பட்டபோது துணைப்பிரதமர் இவ்வாறு கூறினார்.
பள்ளிக்கூடங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்கும் எந்த தடையையும் அரசாங்கம் விதிக்கவில்லை என்று வான் அஸிஸா கூறினார்.
நேற்று முன்தினம் புதன்கிழமை மதியம் 2 மணிவரை மலேசியாவில் 7 நபர்களுக்கு அவ்வியாதி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவர்கள் அனைவரும் சீன நாட்டுப் பிரஜைகள் ஆவர். 74 நபர்கள் சந்தேகத்தின் பேரில் சோதிக்கப்பட்டு அவர்களை அந்நோய் தொற்ற வில்லை என்று கண்டறியப் பட்டது. மேலும் எட்டு நபர்கள் ஆய்வுக்கூட முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
தற்போது வுஹானிலிருக்கும் 78 மலேசியர்களை நாட்டிற்கு கொண்டுவரும் திட்டம் பற்றியும் துணையமைச்சர் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் நாட்டிற்கு திரும்பியவுடன் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
வுஹானில் இருக்கும் மலேசியர்களை நாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு மலேசிய அரசாங்கம் சீன நாட்டு அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஏற்கெனவே கூறியிருந்தார்.