எந்தவொரு தொகுதியில் இருந்தும் பிபிஎஸ் வாபஸ் பெறாது

வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் போட்டியிடும் எந்தவொரு தொகுதியில் இருந்தும் வாபஸ் பெறப் போவதில்லை என பிபிஎஸ் கட்சியின் ஆலோசகர் பைரின் கிட்டிங்கான் தெளிவுபடுத்தினார்.
சபா மக்கள் கூட்டணியுடன் (ஜிஆர்எஸ்) ஒத்துழைக்க பிபிஎஸ் தயார். ஆனால் போட்டியிடும் தொகுதிகளில் இருந்து பிபிஎஸ் வாபஸ் பெறாது என அவர் குறிப்பிட்டார்.
நேரடியாக மோதிக் கொள்வதைத் தவிர்க்க சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன்பாகவே ஜிஆர்எஸ் கூட்டணியின் சில பங்காளிக் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை மீட்டுக் கொள்ளும் என்ற பெர்சத்து பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடினின் அறிக்கை குறித்து பைரின் கருத்துரைத்தார்.
ஜிஆர்எஸ் கூட்டணியில் பெரிக்காத்தான் நேஷனல், பாரிசான் நேஷனல், பிபிஎஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பேச்சுவார்த்தை நடத்தப் பட்டும் இந்தக் கட்சிகள் 17 தொகுதிகளில் மோதிக் கொள்கின்றன.
இதனிடையே எங்களின் முக்கிய எதிரியான வாரிசானைத் தோற்கடிக்கவே நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம் என பைரின் தெரிவித்தார். ஆகையால் வரும் சனிக்கிழமை நடைபெறும் தேர்தலுக்கு முன்பாக எந்தவொரு தொகுதியில் இருந்தும் வாபஸ் பெறும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − thirteen =