எதிரிக்கு 13 ஆண்டு சிறை; இனி புடினின் ஆட்சிக்கு எந்த தொல்லையும் இல்லை

ரஷ்ய வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் அலெக்ஸி நவால்னிக்கு 13 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ரஷ்ய அதிபர் புடினின் ஆட்சிக்கு எந்தவித தடையும் இல்லாத வசதியான சூழல் உருவாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் ஐ எதிர்ப்பவர் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வழக்கறிஞர் அலெக்ஸி நவால்னி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகர் மாஸ்கோவில் புடின் அரசின் ஊழலுக்கு எதிராக தனது ஆதரவாளர் களுடன் போராட்டம் நடத்தி வந்தார். புடின் தன்னைக் கொல்வதற்காக ஆபத்தான நரம்பு ஊசி ஒன்றை செலுத்தியதாக அலெக்ஸி ஏற்கனவே குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு புடின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அலெக்ஸி மற்றும் அவரது மனைவி ஆகியோரை ரஷ்ய போலீசார் கைது செய்தனர்.
அலெக்ஸியின் ஆதரவாளர்கள் பலரும் கைதாகினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அலெக்ஸி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அலெக்ஸி சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். தற்போதைய விளாடிமிர் புடின் அரசு, அலெக்ஸி மீது வேறு பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 13 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவிட்டார்.
தற்போது ரஷ்ய அதிபர் புடினுக்கு எழுபது வயதாகிறது. சமீபத்தில் விளாடிமிர் புடின் தனது ஆட்சி காலத்தை 2036 வரை அதிகரிக்கும் வகையில் ரஷ்ய பார்லிமென்டில் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டார். எனவே இதன்படிப் பார்த்தால் இன்னும் 14 ஆண்டுகள் ரஷ்யா புடின் ஆட்சியில் செயல்படும் என்பது தெளிவாகிறது. தனது 84வது வயதிலேயே புடின் ஓய்வு பெற உள்ளார். கடந்த இரண்டாயிரமாம் ஆண்டு அதிபராகப் பதவியேற்ற பின்னர் 22 ஆண்டுகால ஆட்சியில் 5 அமெரிக்க அதிபர்களை பார்த்துவிட்டார் புடின்.
மேலும் 14 ஆண்டுகள் ரஷ்யாவை ஆளுவதற்கு வசதியாக தற்போது தனக்கு இருந்த ஒரே எதிரியான அலெக்ஸிக்கு 13 ஆண்டு சிறை தண்டனையும் பெற்றுக் கொடுத்து விட்டார். இனி ரஷ்ய பார்லிமென்டில் புடினுக்கு எதிரிகளே இல்லை என்று கூறலாம். புடின் ரஷ்யாவை மன்னராட்சி போல நடத்தி வருவது இதன் மூலம் தெளிவாகிறது என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =