எண்ணெய் உரிமம் குறித்து டிசம்பர் 16 இல் மகாதீருடன் பேச்சு வார்த்தை!

0

எண்ணெய் உரிம விவகாரம் குறித்து வரும் டிசம்பர் 16 ஆம் தேதி பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் தான் பேச்சு வார்த்தை நடத்த விருப்பதாக சபா முதலமையச்சர் டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் கூறினார்.
எண்ணெய் உரிமம் தொடர்பாக பெட்ரோனாஸ் மற்றும் மத்திய அரசாங்கத்துடன் ஏற்கெனவே சில பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த விவகாரத்தில் சபா அரசாங்கத்தின் பரிந்துரைகளை பெட்ரோனாஸிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார்.
சபா அரசாங்கத்திற்கு எண்ணெய் உரிமம் 5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.
மலேசியாவின் எண்ணெய் கையிருப்பில் சபா மற்றும் சரவாக் 60 விழுக்காட்டுக்கு மேல் கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + thirteen =