எட்மன்ட் சந்தாரா பெர்சத்துவில் இணைந்தாரா?

பெர்சத்து ஒரு பூமிபுத்ரா கட்சி என்று அடையாளம் கூறப்பட்ட நிலையில், சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினரான எட்மன்ட் சந்தாரா பிகேஆர் கட்சியில் இருந்து வெளியேறி அக்கட்சியில் இணைந்திருப்பதாக மலேசியா கினி தனது செய்தியில் கூறியுள்ளது.

ஓர் இந்தியரான எட்மன்ட் அக்கட்சியில் இணைந்திருப்பது உண்மையென்றால், அது நாட்டு வரலாற்றில் ஒரு திருப்பமாகக் காணப்படும். பிகேஆர் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் அணியில் இணைந்து, அக்கட்சியிலிருந்து வெளியேறிய 11 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மலாய்க்காரர் அல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் இவர் மட்டுமே. இந்நிலையில், தன் அரசியல் எதிர்காலத்தை நீட்டிக்கச் செய்ய அவர் ஒரு மாற்றுக் கட்சியில் இணைவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். அதன் அடிப்படையில் அவர் பெர்சத்துவில் இணையத் தீர்மானித்திருக்கலாம்.

பெர்சத்துவின் தலைமைச் செயலாளர் மர்ஸுக்கி யாஹ்யா நேற்று பேசுகையில், ‘36 நாடாளு மன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டார்’ என்று கூறியிருக்கிறார். ஆனால் அக்கட்சியில் வெறும் 26 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். பத்து பேர் அதிகரித்திருக்கிறார்கள் என்றால், அது அஸ்மின் அலியின் பங்களிப்பாகத்தான் இருக்க வேண்டும்.

இப்படிக் காயை நகர்த் தினால்தான் பக்காத்தானுக்கு நிகரான அரசியல் பலத்தை பெர்சத்து பெற முடியும். அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், பாஸ் மற்றும் அம்னோவோடு கூட்டு சேரத் தயாராக இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அன்வாருக்குப் போட்டியாக முஹிடின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் இந்த நகர்வு மிகவும் இன்றியமையாததாக அமைகிறது. பெர்சத்து, தே.மு, பாஸ் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 97 பேர் உள்ளனர். ஆனால் பிகேஆர், ஜசெக, அமானா ஆகிய அரசியல் கட்சியின் கூட்டணியான பக்காத்தானில் 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − six =