எஜமானை நோக்கி வந்த பாம்பை கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்

0

கோவை:

கோவை ஒத்தகால்மண்டபம் அருகே உள்ள பூங்காநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயி. இவரது வீட்டின் அருகே ராமலிங்கத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

நேற்று காலை ராமலிங்கம் தனது நண்பருடன் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக நடந்து சென்றார். அப்போது தோட்டத்தில் பாதுகாப்புக்காக வளர்க்கப்பட்டு வரும் 3 நாய்களும் உடன் சென்றன.

நடந்து சென்று கொண்டு இருந்த போது திடீரென வழியில் 6 அடி நீளமுள்ள கொடிய வி‌ஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தை நோக்கி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமலிங்கம் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் பயத்தில் பின்வாங்கினர்.

வளர்ப்பு நாய்கள்

அப்போது உடன் வந்த 3 நாய்களும் தனது எஜமானுக்கு ஆபத்து வந்ததை உணர்ந்து பாம்பை நோக்கி சீறி பாய்ந்தன. பின்னர் பாம்பை கடித்து குதறி கொன்றன. இந்த காட்சியை ராமலிங்கத்தின் நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

தனது எஜமானுக்கு ஆபத்து என்றதும், உடனடியாக செயல்பட்டு வளர்ப்பு நாய்கள் பாம்பை கடித்து குதறி கொன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே வேகமாக பரவியது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + seventeen =