எங்கள் பக்கம் திரும்புமா அரசாங்கம்?
பள்ளி வேன் ஓட்டுநர் லெட்சுமணன் குமுறல்

இங்கு தாமான் மேடானில் வசிக்கும் பள்ளி பேருந்து ஓட்டுநர் லெட்சுமணன் வேலையின்றிப் பரிதவித்து வருகின்றார்.
கோவிட்-19 தொற்றால் எம்சிஓ விதிக்கப்பட்டு பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பல மாதங்களாக எந்தவொரு வருமானமும் இன்றி கஷ்டப்படுவதாக அவர் சொன்னார்.
பள்ளிகள் இனி அடுத்தாண்டு தான் மீண்டும் திறக்கப்படும். இதனால் என்னைப்போல் பள்ளி ஓட்டுநர்கள் பலரும் வருமானம் இன்றித் தவித்து வருகின்றனர்.
பள்ளி வேன், பேருந்து வாங்குவதற்காகப் பெற்ற வங்கிக் கடனைத் திரும்பச் செலுத்த வேண்டும். சாலை வரி புதுப்பிக்கப்பட வேண்டும். குடும்பச் செலவுகளுக்குப் பணம் வேண்டும். இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்று லெட்சுமணன் வேதனையுடன் தெரிவித்தார்.
அரசாங்கம் எங்களுக்கு உதவியது போதாது. இன்னும் உதவ வேண்டும். ஏற்கெனவே ஊழியர் சேமநிதியை மீட்கும் விவகாரமும் கூட அதிருப்தி நிலையாகவே உள்ளது. அதைக் கொண்டு சமாளிக்கும் நிலை கூட இல்லை.
நாட்டில் அனைவரும் இதே போன்ற நிலையில் இருக்கும் போது யாரிடம் பணம் கேட்பது. எங்கள் நிலையை உணர்ந்து அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் என்று லட்சுமணன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × three =