எங்கள் குடும்பமே வள்ளலாரை போற்றி வருகிறோம்;

செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். பா. தியாகராஜன்

அண்மையில் பிரிக்பீல்ட்ஸிலுள்ள இந்திய கலாசார மையத்தில் வள்ளலாரின் இசை நிகழ்ச்சியும் குறுந்தட்டு வெளியீடும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதற்கு தமிழகத்திலிருந்து திரை இசை பின்னணி பாடகர் ஸ்ரீ ஜீவா சீனிவாசன் மற்றும் இவர்களின் குழுவினர்கள் சிவபிரகாஷ், எம்.இராஜா,அரிகிருஷ்ணன் என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பாக படைத்தனர்.
இவ்விழாவிற்கு தலைமையேற்று சிறப்பு உரையாற்றிய செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். பா. தியாகராஜன் பேசும் போது வள்ளலாரை என் தந்தையாருக்கு ரொம்ப பிடிக்கும் அதன் வழி எங்கள் குடும்பத்தினரையும் சன்மார்க்கத்தில் இணைத்தார்.
இன்று வரை எங்கள் குடும்பம் வள்ளலார் நன்னெறிகளையும் கடைப்பிடித்து வருகிறோம்.


இன்று நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடல்களை கம்பீரமான குரலில் ஸ்ரீ ஜீவா சீனிவாசன் அவர் தம் குழுவினர்கள் சிறப்பாக பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
அவரை என் மனதார வாழ்த்துகிறேன் . வள்ளலார் நிகழ்ச்சிகளுக்கு அதிகமான இளைஞர்கள் வரவேண்டும் அவர்களும் பக்தி மார்க்கத்தில் ஈடுபடவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நல்ல விசயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அந்த வகையில் இந்த மண்டபத்தில் இந்திய கலாசார இயக்குனர் ஐயனார் அனைவருக்கும் பயன் தரக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அவருக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
அது போல இந்த நிகழ்ச்சிக்கு நல்ல உள்ளங்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.

ஐயா சுப்பிரமணியர் அடிகளாரையும் பத்மேந்திரா சுவாமிகளையும் மனதார வாழ்த்துகிறேன்.
இந்நிகழ்வுக்கு முன்னாள் செனட்டரும் கிள்ளான் வள்ளலார் மன்றத்தின் தலைவருமான சிவபாக்கியத்திற்கும் தமிழ் மலர் தலைமை நிர்வாகி பெரியசாமிக்கும், அம்பேத்கார் இயக்கத் தலைவர் பஞ்சமூர்த்திக்கும் மஇகா-வை சேர்ந்த மணிவாசகத்திற்கும், பூச்சோங் முரளிக்கும் இங்கு வந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்வில் அருட்பெருஞ் ஜோதி பாடல்களின் குறுந்தட்டை செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். பா. தியாகராஜன் வெளியீடு செய்தார்.
அனைவருக்கும் ஐயனார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + eighteen =