எங்கள் குடும்பமே அந்த நடிகைக்கு ரசிகையாகிவிட்டோம் – ரகுல் பிரீத் சிங்

மனோஜ் பாய்பாய், சமந்தா, பிரியாமணி நடிப்பில் அமேசானில் வெளியாகியுள்ள வெப் தொடர் தி பேமிலி மேன்-2. இந்த தொடரை ஒளிபரப்பக்கூடாது என்று வைகோ, பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு பக்கம் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், மறு பக்கம் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள்.

சமந்தா

சமந்தா – ரகுல் பிரீத் சிங்
இந்நிலையில் நடிகை ரகுல் சிங் டுவிட்டரில், ‛‛தி பேமிலி மேன்-2 தொடரில் நடித்துள்ள மனோஜ்பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அதேபோல் சமந்தா ராஜி கேரக்டரை மிக அற்புதமாக செய்திருக்கிறார். இந்த தொடரை பார்த்த பிறகு எங்கள் குடும்பமே சமந்தாவின் ரசிகைகளாக மாறி விட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 13 =