எங்களையும் சந்தியுங்கள்; மாமன்னருக்கு இந்திய அரசு சாரா இயக்கங்கள் அறைகூவல்


  நாட்டின் எதிர்காலம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சித் தலைவர்களுடன் மாட்சிமை தங்கிய மாமன்னர் எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர் களையும் சந்திக்க முடிவு செய்திருக்கிறார். அவ்வகையில் 250,000 உறுப்பினர்களை மட்டும் பிரதிநிதிக்கும் மஇகாவினருக்கு இந்தியர்களின் எதிர்காலம் குறித்த விவரங்கள் கண்டிப் பாகத் தெரிந்திருக்க வாய்ப்பி ல்லை. மஇகா மட்டுமல்லாது மலேசிய இந்தியர் முன்னேற்றக் கட்சி, மலேசிய இந்திய நீதிக்கட்சி, மலேசிய இந்திய ஐக்கிய கட்சி, அகில மலேசிய இந்தியர் முன்னேற்றக் கட்சி, மலேசிய மக்கள் சக்தி கட்சி, சிறுபான்மை உரிமை செயல் கட்சி ஆகியவற்றுடன் பல இந்தியர் நலச் சங்கங்கள் உள்ளன. மேற்கூறிய அனைத் துக் கட்சிகளுடன் சேர்த்து மாமன்னர் சந்திப்பு நடத்தினால் கண்டிப்பாக அங்கிருக்கும் இந்தியர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என டாக்டர் நெல்சன் முருகன் கூறியுள்ளார்.

  மாமன்னர் மஇகாவுடன் மட்டும்தான் சந்திப்பு நடத்த வேண்டும் என்பது அவசிய மில்லை. மஇகாவை தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகளையும் இந்திய அரசு சாரா இயக்கங் களின் பிரதிநிதிகளையும் மாமன்னர் வரவேற்க வேண்டும். இவர்களை மாமன்னர் சந்திக்கா விட்டால் மீதமுள்ள 1.7 மில்லியன் இந்தியர்களின் பிரச்சினைகள் ஒரு காலமும் தீர்க்கப்படாது.
  ஒவ்வொரு வட்டாரத்திலும் எவ்வளவு இந்தியர்கள் பி40 பிரிவினர், எத்தனை மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அவர்கள் எதிர்நோக்கும் துன்பங்கள், இந்திய மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரச் சிக்கல்கள், கலை – கலாசாரப் பிரச்சினைகள் போன்றவற்றை அங்கிருக்கும் மற்ற அரசியல் கட்சிகளும் இந்தியர் நல அரசு சாரா இயக்கங்களின் வழியும் மாமன்னருக்கு நேரடியாக விவரங்கள் தெரிவிக்கப்படும் என்பது நிச்சயம்.
  எத்தனை காலம்தான் அரசியல் கட்சிகளுடன் மட்டுமே கலந்துரை யாடல் நடத்தப்படும். பல காலம் இது அமலில் இருந்தும் இன்னமும் நம் சமுதாயத்தினருக்கு விடிவு காலம் பிறக்காதது ஏன்?
  குறிப்பாக எங்களை (இந்தியர்களை) பிரதிநிதித்து மஇகாவிடம் மட்டும் மாமன்னர் சந்திக்க வேண்டிய அவசியம் இராது. தலைமை கட்சி எனும் போர்வையில் மஇகா பல பொறுப்பு களையும் காரியங்களையும் செய்யத் தவறிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் மஇகா நினைத்தி ருந்தால் எவ்வளவோ மாற்றங்களை நமக்கு அளித்திருக்கலாம். ஆனால் இன்னமும் நம் இந்திய சமுதாயம் பின்தள்ளப்பட்டிருப்பதற்கு அவர்களின் தூரநோக்குச் சிந்தனையின்மை மற்றும் தூரநோக் குத் திட்டங்கள் இல்லாததுதான் முக்கிய காரணம்.
  மாறாக மஇகா, இதர இந்திய அரசியல் கட்சிகள், இந்திய அரசு சாரா இயக்கங்களின் தலைவர் களை மாமன்னர் சந்திக்க வேண்டும். அப்படி இருந்தால் நிச்சயம் இந்தியர்களின் பிரச்சினைகள் ஒரு நிறைவைக் காணும். என அவர் கூறினார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  3 × one =