எங்களுக்கு காலைச் சந்தை கடை வேண்டும்; கின்றாரா செக்ஷன் 3 மக்கள் வலியுறுத்து

கின்றாரா செக்ஷன் 3இல் உள்ள காலைச் சந்தையையும் இரவுச் சந்தையையும் நடத்துவ தற்கு பல கடை உரிமையாளர் கள் அனுமதிக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். ஆனால் இங்கு 15 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்குத் தெரியாமல் இந்த கடிதத்தை வழங்கியிருப்பது வருத்தமளிப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். காலைச் சந்தையைத் திறப்ப தற்கு வெளியில் இருந்து அனுமதிக் கடிதம் பெற்றவர்கள் கடைகளைப் பார்க்க வந்த போதுதான் எங்க ளுக்குத் தெரியும் என்று அவர்கள் தெரிவித்தனர். காலங்காலமாக வசித்து வரும் எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். கின்றாரா சட்டமன்றமும் சுபாங்ஜெயா மாநகர் மன்றமும் முழுமையாக பரிசீலனை செய்ய வேண்டும் என்று மக்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 7 =