ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவித்தது அமேசான் நிறுவனம்

அமெரிக்காவில் அமேசான் ஈ-காம்ர்ஸ் நிறுவனம், ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ள நிலையில், அங்கு கூடுதலாக 1 லட்சத்து 25 ஆயிரம் பேரை கிடங்கு மற்றும் போக்குவரத்து சம்மந்தமான வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஒரு மணி நேரத்துக்கு வழங்கப்படும் ஆரம்ப சராசரி சம்பளத்தை அந்நிறுவனம் 18 டாலருக்கு மேல் உயர்த்தியுள்ளது.இது கிட்டத்தட்ட 6 சதவீத உயர்வு என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. கோவிட் தாக்கத்துக்கு பிறகு அமெரிக்காவில் பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் சம்பள உயர்வை அறிவித்து தொழிலாளர்களை ஈர்த்து வருகின்றன.மற்றுமொரு பெரு நிறுவனமான வால்மார்ட் ஒரு மணி நேரத்துக்கான சராசரி சம்பளத்தை 16.40 டாலராக உயர்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + twelve =