ஊழல் இல்லாத உறுதிமொழி!

பானாசோனிக் நிறுவனம் ஊழல் தடுப்பு ஆணையத்துடன் ஊழல் இல்லாத உறுதிமொழியில் கையெழுத்திட்டது. ஊழல் இல்லாத உறுதிமொழியில் கையெழுத்திட்டதால் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) முயற்சிக்கு பானாசோனிக் மலேசியா நிறுவனம் ஆதரவாக உள்ளது.ஊழல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளதால் இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பெட்டாலிங் ஜெயாவில் உள்ள விஸ்மா பானாசோனிக் என்ற இடத்தில் இந்த ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
உறுதிமொழி விழாவுக்கு பானாசோனிக் அப்ளையன்ஸ் ஆசியா பசிபிக் நிர்வாக இயக்குனர் ஹிரோயுகி தாகிஷி தலைமை தாங்கினார். அவருடன் எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா, பானாசோனிக் உயர் நிர்வாகம், பானாசோனிக் பிரதிநிதிகள், பானாசோனிக் ஊழியர்கள் மற்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − twelve =