ஊழல் அரசியல்வாதிகளின் மீதான வழக்குகள் தொடர வேண்டும்

அம்னோ தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளை ரத்து செய்யாமல் அவை தொடர புதிய பிரதமர் முஹிடின் யாசின் உறுதி செய்ய வேண்டுமென பிரிபூமி பெர்சத்துவைச் சேர்ந்த ஏ.காடிர் ஜாசின் கேட்டுக் கொண்டார்.

பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியில் அரசியல் தலைவர்களின் ஊழல் வழக்குகள் கைவிடப்படும் சாத்தியம் இருப்பதாக தி சன் பத்திரிகையில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதை அடுத்து, காடிர் ஜாசின் மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா வெளியிட்டுள்ள செய்தியில், மக்களின் நம்பிக்கையைப் பெற தலைவர்கள் மீதான வழக்குகள் தொடர வேண்டுமென்றும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்ட வழக்குகளை மறு ஆய்வு செய்ய வேண்டுமென குறிப்பிட்டது போல முஹிடின் அந்த வழக்குகளை ரத்து செய்யக் கூடாதெனக் கேட்டுக் கொண்டார்.

பாகோ நாடாளுமன்ற உறுப்பினரான முஹிடின், தம்மை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில், பக்காத்தான் ஹராப்பான் மேற்கொண்ட மக்களின் நல்வாழ்வுத் திட்டங்களை நிறுத்தாமல் தொடர வேண்டுமென காடிர் ஜாசின் கேட்டுக் கொண்டார்.

2018 ஆண்டு பக்காத்தான் கூட்டணியின் வாயிலாக வெற்றி பெற்ற அவர், அந்த ஆட்சியின் ஊழல் ஆட்சியை ஒழிக்க எடுத்த நடவடிக்கைகளை நிறுத்தாமல் தொடர வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் பிரதமரான நஜிப் ரசாக் பல கோடி ரிங்கிட்டை முறைகேடு செய்த 1எம்டிபி வழக்கை எதிர்கொண்டிருக்கிறார். அவரின் மனைவி ரோஸ்மா மன்சோர், முன்னாள் துணைப் பிரதமர் அமாட் ஸாஹிட் ஹமிடி இன்னும் சில அம்னோ தலைவர்களும் ஊழல் வழக்குகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − eleven =