ஊழலற்றவர்கள் மட்டுமே அமைச்சரவையில் இடம் பெறுவர்

தமது அமைச்சரவையில் ஊழல் பேர்வழிகளுக்கு இடமில்லை என்று என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெளிவுபடுத்தினார். விரைவில் தாம் அறிவிக்கவிருக்கும் அமைச்சரவைப் பட்டியலில் தூய்மையானவர்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பார்கள் என அவர் தெரிவித்தார். ஊழல் குற்றச் சாட்டுகளை எதிர் நோக்கி உள்ள அம்னோ தலைவர்கள் அமைச்சரவையில் இடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுப்பப் பட்டிருக்கும் இவ்வேளையில், பிரதமரின் இந்த உத்தரவாதம் அமைந்துள்ளது.

தூய்மையான, நேர்மையான மற்றும் திறம் பட நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் முயற்சியை தாம் தீவிரப்படுத்தப் போவதாக முஹிடின் தெரிவித்தார். ஊழலற்ற தூய்மையான மற்றும் ஆற்றல் மிக்க ஒர் அரசாங்கத்தைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை தாம் அறிந்துள்ளதாக பெர்சத்து தலைவருமான அவர் சொன்னார். இதன் முதல் கட்டமாக லஞ்ச ஊழலற்ற நேர்மையான மற்றும் திறமையான அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என அவர் உறுதியளித்தார். நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது பிரதமர் இத்தகவலை வெளியிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 8ஆவது பிரதமராக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்டுல்லா சுல்தான் அமாட் ஷா முன்னிலையில் முஹிடின் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். கடந்த வாரம் திங்கட்கிழமை பக்காத்தான் ஹராப்பான் அரசாங் கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் அரசாங் கத்திற்கு முஹிடின் தலைமையேற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + five =