ஊடகத்தின் முக்கியத்துவத்தை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உணர்தல் அவசியமாகும்

0

தமிழகத்தில் உள்ள கலைஞர்களுக்கு அங்குள்ள ரசிகர்கள் கொடுக்கும் பேராதரவுக்கு நிகராக மலேசிய ரசிகர்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர். அதனால்தான் தமிழகத்திலிருந்து வரும் இசைத்துறை கலைஞர்களாக இருந்தாலும் நடிகர்களாக இருந்தாலும் அனைவருக்கும் மலேசிய ரசிகர்கள் டிக்கெட் வாங்கி தங்களின் வற்றாத ஆதரவவை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்திலிருந்து சின்னத்திரை பட்டாளமும் ஒருசில முன்னணி நடிகர்களும் மிகப் பெரிய அளவிலான கலைவிழாவை ஏற்று நடத்தினர்.
இந்தக் கலைவிழா குறித்த பேச்சுவார்த்தை எழுந்தபோதே அதில் திறமையான மலேசியக் கலைஞர்களின் படைப்புகளையும் ஏற்றுக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினருக்கு தங்களின் இயக்கம் கோரிக்கை முன்வைத்திருந்ததாக மலேசிய கலை, கலாசார மற்றும் நம்பிக்கை சமூகநல இயக்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் சுகுமாரன், சிலாங்கூர் மாநிலத் தலைவர் அஷோக்குமார், கூட்டரசுப் பிரதேச தலைவர் சசிதரன் ஆகியோர் கூறினர்.
ஆனாலும் கடைசி வரை அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாமல் போனது. இந்த கவலை ஒருபுறமிருக்க அன்றைய தினத்தில் ஊடகத்தினருக்கு குறிப்பாக பத்திரிகையைச் சேர்ந்த சில மூத்த புகைப்பட கலைஞர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக கேள்வியுற்றோம்.
இந்த நிகழ்ச்சி இத்துணை பிரமாண்டமாக நடைபெறுவதற்கு ஊடகத்தின் பங்கு அளப்பரியது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவும் வேதனையளிக்கக்கூடிய ஒன்றாகும்.
நாங்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை சில மாதங்களுக்கு முன்னதாக வெற்றிகரமாக நடத்தியிருந்தோம். அந்த நிகழ்ச்சியில் தமிழகக் கலைஞர்களுக்கு நிகராக மலேசிய கலைஞர்களுக்கும் அதிகமான வாய்ப்புகளை வழங்கியிருந்தோம். இதேபோன்ற கொள்கைகளை இதர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பின்பற்றினால் வரும் காலங்களில் இவ்வாறான தவறுகளையும் இடையூறுகளையும் தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர்கள் ஒருசேர கருத்துரைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + three =