உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே முக்கியம்

கோவிட்-19 நோய்த் தாக்கத்தின் எதிரொலியால் நாட்டில் வேலையில்லா பிரச்சினை தலைவிரித்தாடுவதால், உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதில் அரசு முக்கியத்துவம் செலுத்த வேண்டுமென்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டில் நிலவிவரும் வேலையில்லாப் பிரச்சினையின் காரணமாகக் குறைந்தது ஒரு மில்லியன் மலேசியர்கள் பாதிக்கப்படுவர் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் சனிக்கிழமையன்று எச்சரித்தது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.
பொருளாதார நிபுணர்கள் இது பற்றிக் குறிப்பிடும்போது, அந்நியத் தொழிலாளர்களை விட உள்ளூர் தொழிலாளர்களின் நலனும் உரிமையும் முக்கியம் என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
அது சம்பந்தமாக அவசர தீர்மானம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டுமென்றும் இருக்கின்ற வேலைகளை உள்ளூர் தொழிலாளர்களுக்குத் தர முன்னுரிமை தர வேண்டுமென்றும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) தலைவர் அப்துல் ஹலிம் மன்சோர் வலியுறு த்தியுள்ளார். 1955ஆம் ஆண்டு தொழிலியல் சட்டம், 1969ஆம் ஆண்டு தொழிலாளயர் சமூகப் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு உட்பட்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆவணமில்லாத மற்றும் வேலையிழந்த அந்நியத் தொழிலா ளர்களைச் சொந்த நாடுகளுக்கு அனுப்புவதைத் தாம் ஆதரிப் பதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் தொழிலாளர்கள் வேலையிழந்தும் சம்பளம் குறைக்கப்பட்டும் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். எம்40, பி40 பிரிவு தொழிலாளர்கள் பாதி சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளவும் சம்பளமில்லாத விடுப்பை எடுத்துக் கொள்ளவும் நெருக்குதல் கொடுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். பொருளகங்களுக்குக் கடன் செலுத்துவதை இவ்வாண்டு இறுதி வரை நீட்டிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, அஸ்லி அமைப்பின் தலைவர் டான்ஸ்ரீ ரேமன் நவரத்தினம் கூறும்போது, வேலையில்லாப் பிரச்சினைக்கு அரசு தக்க தீர்வைக் காணவும் அது சம்பந்தமான வியூகத்தை வகுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
வேலையில்லாப் பிரச்சினையை ஒரு கடுமையான பேரிடர் என்று அறிவித்து, அதனைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆட்குறைப்பு நடவடிக்கையை அமல் படுத்துவதைத் தவிர்க்க, தனியார் துறைக்கு ஊக்குவிப்புத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மலாயா பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியர் ராஜா ராசையா, தொற்றுநோய் அவசரச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் உருவாக்க வேண்டுமென்றும் வேலையிழந்த தொழிலாளர்களுக்குப் புதிதாக உருவாகியிருக்கும் தொழில் துறைகளான சுவாசக் கருவிகள், முகக் கவசம், உணவு உற்பத்தித் துறைகளின் வேலை வாப்புகளை அளிக்க முன் வர வேண்டுன்றும் கேட்டுக் கொண்டார். அனைத்துத் தர மக்களுக்கும், வேலையில் இருப்போருக்கும், அரசு உதவ முன் வரவேண்டும். கோவிட்-19 நோய் ஒழியும் வரை மக்களுக்கு அரசின் உதவியைத் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இதுபோன்ற அணுகுமுறையை டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அமல் படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =