உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் சன்வே நிறுவனம்

0

உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சன்வே நிறுவனம் ஜூலை 6 ஆம் தேதி “கெ சானா கெ சினி கெ சன்வே” (முந ளுயயே முந ளுini முந ளுரறேயல) என்ற பிரச்சாரத்தைத் தொடங்குகிறது.
சன்வே நிறுவனம் மற்றும் தீம் பார்க்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எச்.சி.சான் கூறுகையில், ஜூலை 4 முதல் சன்வே லகூன் தீம் பார்க் மீண்டும் செயல்படும் என்பதால் இந்த பிரச்சாரம் சரியான நேரத்தில் தொடங்கப்படுகிறது என்றார்.
இந்த பிரச்சாரத்தின் மூலம் சன்வே நிறுவனம் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் 70 சதவீத கழிவுடன் சில சுற்றுலா தொகுப்புகளை வழங்குகின்றது.
“கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்த ஒத்துழைத்த அனைத்து மலேசிய மக்களுக்கும் நன்றி. “சன்வே நிறுவனம் ஒரு முக்கிய சுற்றுலாத் தலம் என்பதால், உள்நாட்டில் சுற்றுலாத் துறையை மறுதொடக்கம் செய்வதில் நாங்கள் எங்கள் பங்கை செய்ய வேண்டும்”என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
உள்நாட்டு சுற்றுலாவிற்காக அரசாங்கம் ரிம1,000 வரி நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த பிரச்சாரங்கள் இருக்கும்.
ரிம499 விலையில் விற்பனையாகும் “கெ சானா கெ சினி கெ சன்வே’ தொகுப்பில், சன்வே பிரமிட் ஹோட்டலில் இரண்டு இரவுகள் தங்குவது, பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்கான நுழைவுச் சீட்டுகள், சன்வே லகூன் மற்றும் ரிம 200 மதிப்புள்ள சன்வே பிரமிட் பண பற்றுச்சீட்டுகள் ஆகியவை அடங்கும். “இந்த தொகுப்பின் அசல் மதிப்பு ரிம1,599 ஆகும். ஜூலை 6 முதல் ஜூலை 20 வரை வாடிக்கையாளர்கள் இந்த தொகுப்பை வாங்கலாம்.
ஜூலை 7 முதல் அக்டோபர் 31 வரை வாடிக்கையாளர்கள் இந்த தொகுப்பைப் பயன்படுத்தி கோலாலம்பூர் சன்வே சிட்டிக்கு வருகை புரிந்து மகிழலாம்” என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், சன்வே நிறுவனம் சுகாதாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை வழங்குவதால், ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் சன்வே நிறுவனம் வளாகத்தில் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தப்படுவதாகவும் சான் கூறினார். “சன்வே பிரமிட், சன்வே லகூன், சன்வே ஹோட்டல் உட்பட அனைத்து சன்வே வளாகங்களிலும் அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறைகள் பின்பற்றப்படும்” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =