உலகில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் பாங்காக் நகருக்கு முதல் இடம்

0

பாங்காக்:

உலகின் தலைசிறந்த 10 சுற்றுலா நகரங்கள் எது? என்று ஆராய 200 நகரங்களை இலக்காக கொண்டு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக், தொடர்ச்சியாக 4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்து உள்ளது தெரியவந்து இருக்கிறது. அங்கு ஆண்டிற்கு 2 கோடியே 28 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

2 மற்றும் 3-வது இடத்தை பாரீஸ் மற்றும் லண்டன் நகரங்கள் தன்வசப்படுத்தி உள்ளன. இங்கு ஆண்டிற்கு தலா 1 கோடியே 91 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். இதன்தொடர்ச்சியாக துபாயில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டிற்கு 1 கோடியே 59 லட்சம் ஆக இருக்கிறது. நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களை தென்கிழக்கு ஆசிய நகரங்களான சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் பிடித்து உள்ளன. மேலும் நியூயார்க், இஸ்தான்புல், டோக்கியோ மற்றும் ஆந்தாலியா போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்கள் என முதல் பத்து இடங்களில் இணைந்து உள்ளன.

மிதக்கும் மார்க்கெட்

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 200 நகரங்களில் சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை 76 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. பாங்காக் முதலிடத்தில் இருந்தாலும், தாய்லாந்து நாட்டில் மற்ற சுற்றுலா தலங்களில் மக்களின் வருகை 1.03 சதவீதமாக குறைந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து 0.89 சதவீதம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 1 =