உலகிலேயே முதல் நாடாக எல்சல்வடாரில், பிட்காயினுக்கு சட்ட அங்கீகாரம்

சத்தோஷி நகமோட்டோ என்ற ஜப்பானியரால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் நாணயம்தான் பிட்காயின் ஆகும்.

இந்த நாணயத்தை நாம் கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பயன்படுத்த முடியாது. கணினியில் கண்களால் மட்டுமே பார்க்க முடியும். பரிமாற்றம் செய்ய இயலும். இந்த நாணயம் இதுவரை உலகில் எந்தவொரு நாட்டிலும் சட்டபூர்வ அங்கீகாரத்தைப் பெறவில்லை. இந்த பிட்காயினை சட்டபூர்வ பணமாக மத்திய அமெரிக்க நாடான எல்சல்வடார் ஆக்கி உள்ளது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் இதற்கு ஆதரவாக 84 வாக்குகளில் 62 வாக்குகள் விழுந்தன. அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் அதிபர் நயீப் புக்கெல் ஒப்புதல் அளித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில்,“எல்சல்வடார் அரசு ஒரு வரலாற்றை உருவாக்கி உள்ளது. இந்த நடவடிக்கையால் வெளிநாட்டில் வசிக்கிற நம் நாட்டவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்புவது எளிதாகும். இது நம் நாட்டுக்கு புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வரும்” என்றார். 90 நாட்களில் அமெரிக்க டாலருடன், பிட்காயின் சட்டபூர்வ பணமாக மாறும்.இந்த நாட்டில் இனி எல்லா பொருட்களுக்கும், சேவைகளுக்கும் பிட்காயினை கொடுக்க முடியும். தற்போது ஒரு பிட்காயின் மதிப்பு சுமார் ரூ.27 லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 20 =