உலகளாவிய ரப்பர் விலையை அரசாங்கம் விரைவில் உறுதிப்படுத்தும்

0

ரப்பர் விலையை உறுதிப்படுத்த அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கோவிட்-19 நோய்த்தொற்றால் அனைத்துலக சந்தை, குறிப்பாக சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரப்பரின் தேவை குறைந்துள்ளதால், ரப்பர் விலையை நிலைநிறுத்த அரசாங்கம் தொடர்ந்து செயல்படும்.
ரப்பரின் விலையை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் உலகின் முக்கிய ரப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளான தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவுடன் அரசாங்கம் ஒத்துழைத்து வருவதாக தோட்டத் தொழில்களை மற்றும் மூலப்பொருள் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ ஜெக் செங் தெரிவித்தார்.
“இந்த ஒத்துழைப்பின் கீழ், மூன்று நாடுகளின் உற்பத்தி பங்கு உலகின் ரப்பர் உற்பத்தியில் 63.3 சதவீதமாகும்“ என்றார் அவர்.
ரப்பர் விலையை உறுதிப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து செனட்டர் சித்தி ஃபாத்திமா யஹ்யா எழுப்பிய கேள்விக்கு டாக்டர் வீ ஜெக் செங் இவ்வாறு பதிலளித்தார்.
தற்போது கோவிட்-19 காலத்தில் ரப்பர் கையுறைகளின் தேவைகள் அதிகரித்து வருவதால் பொருட்களின் உற்பத்தி உள்ளிட்ட நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு ரப்பரின் விலையை வலுப்படுத்த நாட்டில் ரப்பரின் பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று வீ கூறினார்.
“இது நாட்டில் புதிய முதலீட்டு வாய்ப்புகளைத் திறக்கும். இதனால் ரப்பர் பொருட்கள் உற்பத்தித் துறையை மேலும் விரிவுபடுத்த முடியும்” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 16 =