உலகளாவிய போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச விமான டிக்கெட் வழங்குகிறது ஏர் ஆசியா

0

தேசிய மற்றும் அனைத்துலக நிலையிலான மாநாடு, போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஏர் ஆசியா நிறுவனம் இலவசமாக 100 விமான டிக்கெட்டை வழங்குகிறது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ரியாட் அஸ்மான் அறிவித்தார்.
ஏர் ஆசியா விமான நிறுவனம் தமிழ் அறவாரியத்தோடு இணைந்து இந்த விமான டிக்கெட் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைய்யொப்பமிட்டது. இந்நிகழ்ச்சி நேற்று நண்பகல் 12 மணியளவில் பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
அனைத்துலக ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த இலவச விமான டிக்கெட் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ளுகூநுஆ எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் திட்டத்தினை ஊக்குவிக்கும் வகையிலும் ஏர் ஆசியா மற்றும் தமிழ் அறவாரியம் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறுகையில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக ஏர் ஆசியா நிறுவனம் இத்திட்டத்தை ஏற்பாடு செய்தது பாராட்டுக்குரியதாகும். தமிழ்ப்பள்ளிகளுக்கு இது பெருமையான விஷயமும் கூட. ஏர் ஆசியா நிறுவனம் இத்திட்டத்தை அறிமுகப் படுத்தியது இதர விமான நிறுவனங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்.
இதர விமான நிறுவனங் களும் தமிழ்ப்பள்ளிக்கு மட்டு மல்லாது மலாய், சீனப்பள்ளிகளுக்கு இதுபோன்ற திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்..
மாணவர்கள் மேற்கல்வியை எந்தத் துறையில் தொடர்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். தொழில்புரட்சி 4.0 வளர்ச்சியினால் வருங்காலங்களில் மனிதர் இல்லாமல் எந்திரங்களால் மட்டுமே இயங்கக்கூடிய வேலைகள் வரலாம். இதனால், பல்கலைக்கழகங்களில் மேற்கல்வியை முடித்த பிறகும் வேலை கிடைக்காத ஒரு சூழ்நிலை ஏற்படும்.
மாணவர்கள் கூஏநுகூ எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில்கல்வி பயிற்சியின் கீழ் கல்வியைத் தொடரலாம் என்றும் அவர் கூறினார். இதனிடையே, ஏர் ஆசியாவின் இந்தப் புதிய திட்டம் குறித்து தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி.திரவியம் கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் வழி அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் பாடங்களில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க முடியும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த அனைத்துலகப் போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியுள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த விமான டிக்கெட்டுகளை விநியோகிப்பது தமிழ் அறவாரியத்தின் பங்கு. ஓர் ஆண்டுக்கு 100 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, இதற்காக தனிப்பட்ட குழு ஒன்று அமைக்கப்படும். மாணவர்கள் பங்கு பெறும் போட்டியின் தரம், அவர்களது படைப்புகள் மற்றும் குடும்ப பின்னணியை முன் வைத்தே இந்த டிக்கெட்டுகளை அக்குழு வழங்கும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, தமிழ்ப்பள்ளி மாணவர் களின் சாதனைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே இந்த டிக்கெட் வழங்கும் நடவடிக்கை அமைந்துள்ளது. இந்நட வடிக்கைக்கு முழு ஆதரவு வழங்கியிருக்கும் ஏர் ஆசியா நிறுவனத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கல்வி துணையமைச்சர் தியோ நி சிங் தெரிவித்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் , தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.செல்வம், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜு, வழக்கறிஞர் எம்.மனோகரன் உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 8 =