
கோவிட்-19 உலகளாவிய கடும் நோயாக உருமாறி வருவதால் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் சுயமாக முன்வந்து அதனைச் செலுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் அச்சம் கொண்டிருக்கத் தேவையில்லை. அது பாதுகாப்பானது. அரசு தரும் புள்ளி விவரங்களையும் செய்திகளையும் மக்கள் நம்ப வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார். எனவே, அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு, அரசின் வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை அனுசரிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார். அனைவரும் பாதுகாப்பாக இருக்க ஒத்துழைக்க வேண்டும். அரசுக்கு உதவ வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார். ‘ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருந்தால்தான், அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும்’ என்று அவர் அவர் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.