உத்தரவைப் பின்பற்ற அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை

0

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மக்கள் அலட்சியப்படுத் தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு முதல மைச்சர் சௌ கோன் இயோவ் எச்சரித்தார்.
அரசாங்கம் இந்த உத்தரவைப் பிறப்பித்தும் இன்னும் பலர் உணவு அங்காடிக் கடைகளின் வளாகங்களில் கூடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று முதல்நாள் என்பதால் மக்களிடையே சில பலவீனங்கள் இருந்து வருகின்றன. தங்களுக்கு அவகாசம் தேவைப்படுவதாக மக்கள் கருதக்கூடும் என்றார் அவர். ஆகையால் இந்தத் தடை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடகங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் சொன்னார். கோவிட் – 19 ஓர் அச்சுறுத்தல் என்பதால் அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
நேற்று பினாங்கு சுகாதார இலாகாவில் அறுவை சிகிச்சை சீருடை மற்றும் இதர பாதுகாப்பு ஆவணங்களை ஒப்படைத்த பின் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். கோவிட் – 19 தாக்கத்தைத் தொடர்ந்து நேற்று முதல் மார்ச் 31ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டை அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =