உண்மையை மறைத்ததால் உலகம் மிகப்பெரிய விலையை கொடுக்கிறது – சீனா மீது சாடிய டிரம்ப்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்து 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 400 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் 88 ஆயிரத்து 465 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தொடர்பாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

குறிப்பாக வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை சந்திக்கும் அமெரிக்க அதிபர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசை ‘சீனா வைரஸ்’ என மேற்கொள் காட்டி பேசிவருகிறார். ஆனால், அமெரிக்க ராணுவம் தான் வுகான் நகரில் இந்த வைரசை பரவவிட்டதாக சீனா குற்றம் சாட்டிவருகிறது.

இந்நிலையில், வெள்ளைமாளிகையில் நேற்று செய்தியாளார்களை சந்தித்த அதிபர் டிரம்ப், வைரஸ் குறித்த உண்மையை சீனா மறைப்பதாக குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கொரோனா பரிசோதனை செய்யும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

இந்த வைரஸ் தொடர்பான விவரங்களை சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரிந்திருந்தால் வைரஸ் பரவிய பகுதியிலேயே (வுகான் நகரம்) கட்டுப்படுத்தி இருக்கலாம். கொரோனா வைரஸ் குறித்த விவரத்தை சீனா தெரிவிக்காததால் தற்போது உலகமே அதற்கு மிகப்பெரிய விலையை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.

கொரோனா குறித்த தொடக்க நிலை அறிக்கைகளை சீனா மறைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர்கள் (சீனா) வெளியிடும் விவரங்கள் உண்மையாக இருக்கும் என நம்புவோம்.

இந்த வைரஸ் குறித்து மக்களுக்கு தெரியவந்திருந்தால் முன்னதாகவே தடுக்கப்பட்டிருக்கும். எங்களுக்கு வைரஸ் தொடர்பான தகவல் கிடைத்திருந்தால் சீனாவின் எப்பகுதியில் வந்ததோ அங்கேயே தடுத்து நிறுத்தி இருக்கலாம். ஆனால் தற்போது இந்த கொடிய வைரசால் உலகமே பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்து மிகவும் மோசமான நிலையாகும்.

என்று அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 12 =