உண்மையான நண்பர்களை கஷ்ட காலத்தில் அறியலாம்

உண்மையான நண்பர்களை இக்கட்டான காலங்களில் மட்டுமே இனம் காண முடியும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அச்செய்தியை வெளியிட்ட அவர், அதனோடு பாஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் தாம் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்திருந்தார்.
நேற்று முன்தினம், எஸ்ஆர்சி வழக்கில் உயர்நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையையும் 21 கோடி ரிங்கிட் அபராதத்தையும்
விதித்த பின்னர், மேற்கண்ட தலைவர்கள் நஜிப்பின் வீட்டுக்குச் சென்று அவருக்கு ஆறுதல் கூறியி ருந்தனர்.
அந்தக் குழுவில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான், தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசான், சூரா மன்றத்தின் உறுப்பினர் கைருடின் அமான் ரஸாலி ஆகியோர் இருந்தனர். நஜிப் தமது முகநூலில் மேலும்
கூறும்போது, உண்மையான நண்பர்களைக் காண்பது அரிது என்றாலும், அவர்கள் நமக்காக இறைவனிடம்
பிரார்த்திப்பவர்கள் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 1 =