உண்மைகளைக் காதுகொடுத்துக் கேளுங்கள்!

நாட்டின் நிலை பற்றி வியூக ஆய்வாளர்கள் சொல்கின்ற கருத்துகளை ஒரு முன் எச்சரிக்கையாகக் கொள்ளுமாறு பெர்சத்து கட்சியின் கொள்கை வியூகத் தலைவர் டத்தோ வீரா ராய்ஸ் ஹுசேன் கூறினார்.

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஒரு கொள்கை வியூகவியலாளர் என்ற முறையில் உண்மையும் தெளிவான நிலைகளையும் சொல்வது என்னுடைய கடமையாகிறது என்றார் அவர்.
’எமிர் ரிசேர்ச் என்ற ஆய்வு நிறுவனத்தை நான் தொடங்கிய போது, கடந்த 2018ஆம் ஆண்டு, அன்றைய நாட்டின் தேர்தலை என் நிறுவனத்தில் இடம்பெற்ற 7 கல்வியாளர்கள் மிகச் சரியாகக் கணித்தார்கள்.
வரும் 2023ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலைப் பற்றியும் அவர்களால் கணிக்க முடியும். பக்காத்தான் தலைவர்கள் 3 விஷயங்களைச் செய்யாமல் போனால் நிச்சயமாக அவர்களுக்கு பிரச்சினை ஏற்படும்.
1.வியூக ஆய்வாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கிய அந்த தேர்தல் உறுதிமொழிகளை புறக்கணிக்காமல் இருக்க வேண்டும்.

  1. முன்னோக்கிச் சிந்திக்கக் கூடியவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தேர்வுக் குழுக்களை அமைக்க வேண்டும்.
  2. பக்காத்தானின் தலைவர் மன்ற அறிக்கைகளை மட்டும் கேட்கின்ற நிலை மாறவேண்டும்.
    நாடு இப்போது எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்ற கடுமையான கேள்வியை பலர் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். புதிய மலேசியாவுக்கு அவர்கள் ஆதரவாக இல்லை என்பதற்கான அறிகுறி இது.
    என் மனதில் தோன்றியதை முதல் குரலாக நான் எழுப்பியிருக்கிறேன். வியூக ஆய்வாளர்கள் சொல்கின்ற கருத்துகளை ஒரு முன் எச்சரிக்கையாகக் கொள்ளுங்கள் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 1 =