உணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே

0

உணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களும் நமது முதன்மைப் பணியாளர்களே என வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஸுரைடா கமாருடின் கூறினார்.
மோட்டார் சைக்கிள்களில் சென்று உணவு விநியோகம் செய்யும் இந்த தொழிலாளர் களுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் பண்டார் புத்ரி பூச்சோங்கில் உணவு விநியோகிக்கும் ஒரு பெண் ஊழியருக்கு எதிராக நபர் ஒருவர் முரட்டுத் தனமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து அவர் கருத்துரைத்தார்.
அந்த சம்பவம் தொடர்பான ஒரு காணொளி வைரலாகியுள்ளது. அந்த காணொளியில் அந்நபர் நடந்து கொண்ட விதம் முறையற்றது என அவர் சொன்னார்.
சம்பந்தப்பட்ட அந்தப் பெண், அந்நபருக்கு எதிராக போலீஸில் புகார் செய்துள்ளதாகவும்
போலீஸ் விசாரணையைத் தொடங்கி யுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தப் பெண் ஒரு முதன்மைப் பணியாளர். அவருக்கு நாம் அனைவரும் மதிப்பளிக்க வேண்டும். கோ விட் -19 வைரஸ் தாக்கத் தை எதிர்த்து நாடு போராடி வரும் வேளை யில், அப்பெண் ணின் தியாகத் தை நாம் மதிக்க வேண்டும் என ஸுரைடா தெரிவித்தார். உணவு விநியோகிக்கும் தொழிலாளர்கள் மழை, வெயிலைப் பொருட்படுத்தாமல் வேலை செய்து வருகின்றனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + twenty =