உணவகத் தொழிலாளர்கள், உரிமையாளர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வேண்டும்


  உணவகத் தொழிலாளர்களும் உரிமையாளர்களும் முன்களப் பணியாளர்களே என்பதால் அவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ‘பிரிமாஸ்’ எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜே.சுரேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

  மக்களுக்கு மிக முக்கியமாக விளங்கும் உணவு சேவை வழங்கும் உணவகத் தொழிலாளர்கள், உரிமையாளர்களின் சுகாதார நலன் பேணப்பட வேண்டும்.
  ஆகவே தடுப்பூசி போடுவதில் அரசாங்கம் எங்கள் துறையைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
  கோவிட்-19 அதிகரித்து வருவதால் உணவகங்களில் அமர்ந்து உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உணவக உரிமையாளர்களுக்கு மீண்டும் பொருளா தாரப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.
  ஒரு மேசையில் 2 பேர் அமர்ந்து உண்ண அரசாங்கம் ஒப்புதல் தர வேண்டும்.
  தற்போது வாடிக்கையாளர்கள் மேசையில் அமர்ந்து உண்ண முடியாத நிலையில் உணவக உரிமையாளர்கள், பணியாளர்கள் சம்பளம், கடை வாடகை, வங்கிக் கடன், தண்ணீர், மின்சாரக் கட்டணம், குடும்பச் செலவு உட்பட பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர்.
  எனவே அரசாங்கம் முன்பு போல் மானியம், உதவித் தொகை உட்பட மற்ற சலுகைகளையும் தர வேண்டும் என்று சுரேஷ் கேட்டுக் கொண்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  18 − 6 =