உணவகங்கள், கடைகள் பின்னிரவு 2.00 மணி வரை செயல்பட அனுமதி

இன்று முதல் அனைத்து உணவகங்களும் கடைகளும் பின்னிரவு 2.00 மணிவரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
வருமானம் குறைவு என்று கடை, உணவக உரிமையாளர்கள் முறையிட்டுள்ளதால், பின்னிரவு 2.00 மணி வரை நீட்டிக்க தேசியப் பாதுகாப்பு மன்றம் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக சுற்றுலாப் பகுதிகளில் அதிகமான புகார்கள் கிடைத்துள்ளதால், தேசியப் பாதுகாப்பு மன்றம் இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.
மார்ச் மாதம் விதிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தர வின் போது உணவகங்கள் இரவு 8.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப் பட்டது.
இதனிடையே பள்ளிவாசல் களில் தொழுகை செய்ய அனைத்து அந்நிய நாட்டவர் களுக்கும் அனுமதி வழங்கப் பட்டுள்ளதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + two =